மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை
5 minutes ago
இன்று இனிதாக
7 minutes ago
எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பம் நிரப்ப உதவ கோரி தீர்மானம்
8 minutes ago
இளைஞரிடம் போன் பறிப்பு
8 minutes ago
திருப்போரூர்: கோவளம் கடலில் மூழ்கி மாயமான மாணவர் உடல் மீட்கப்பட்டது. ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதியைச் சேர்ந்தோர் கேதன்குமார், 19, நிகில் ஆனந்தன், 19; இருவரும், திருப்போரூர் அடுத்த காலவாக்கம் பொறியியல் கல்லுாரியில் முதலாண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, நண்பர்களுடன் கோவளம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு, கடலில் குளித்த போது, கேதன்குமார், நிகில் ஆனந்தன் ராட்சத அலையில் சிக்கினர்.கேதன்குமாரை மட்டும், உடனிருந்த மாணவர்கள் மீட்டு, கேளம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதா க தெரிவித்தனர். உடலை மீட்ட கேளம்பாக்கம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கடலில் மாயமாகிய நிகில் ஆனந்தன் உடல், சூலேரிக்காடு கடற்கரையில் நேற்று காலை ஒதுங்கியது. கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
5 minutes ago
7 minutes ago
8 minutes ago
8 minutes ago