உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடையை ஒப்படைத்த பஸ் நிலைய வியாபாரிகள்

கடையை ஒப்படைத்த பஸ் நிலைய வியாபாரிகள்

கோயம்பேடு, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இதனால், கோயம்பேடில் இருந்து ஆம்னி பேருந்துகள் அனைத்தும், கிளாம்பாக்கத்திற்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டன.இதையடுத்து, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் ஹோட்டல், தேநீர் கடை, டிபன் கடைகள், தின்பண்ட கடைகள் உள்ளிட்ட பல கடைகள் இருந்தன. இவற்றை, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் வாடகைக்கு விட்டிருந்தது.இந்நிலையில், ஆம்னி பேருந்து நிலையம் மூடப்பட்ட காரணத்தால், வியாபாரிகள் கடைகளை மூடி அவற்றின் சாவிகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ