உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இறைச்சி கடை ஊழியர் கூவத்தில் சடலமாக மீட்பு

இறைச்சி கடை ஊழியர் கூவத்தில் சடலமாக மீட்பு

கோட்டூர்புரம், மாயமான இறைச்சி கடை ஊழியர் உடல், கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.சென்னை கோட்டூர்புரம், மேற்கு கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் நாதன், 48; இறைச்சி கடை ஊழியர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.aஇதனால் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி, கல்லீரல் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.விரக்தியடைந்த நாதன், கடந்த 9ம் தேதி மாயமானார். அவரை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம், இந்திரா நகர் ரயில் நிலையம் அருகில் உள்ள கூவம் ஆற்றில், நாதன் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. கோட்டூர்புரம் போலீசார், உடலை கைப்பற்றி, அவர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ