உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேபிள் டிவி ஆப்பரேட்டர் விபத்தில் உயிரிழப்பு

கேபிள் டிவி ஆப்பரேட்டர் விபத்தில் உயிரிழப்பு

திருவொற்றியூர், பிப். 1-திருவொற்றியூர், சரஸ்வதி நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 53; கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர். நேற்று முன்தினம் இரவு மணலி விரைவு சாலை, சாத்தாங்காடு சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது, இவரது பைக் மோதி விபத்துக்குள்ளானது.இதில், நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவ்வழியே வந்த மற்றொரு பைக் இவரது தலையில் இடித்து விட்டு, நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.தகவலறிந்த, அண்ணாமலையின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். தெருவிளக்குகள் எரியாததும், சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள கன்டெய்னர் லாரிகளும் தான் விபத்திற்கு காரணம் என, அவர்கள் குற்றஞ்சாட்டினர். சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை