உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர் பிரத்யேக பஸ்கள் மேலும் அதிகரிப்பு இன்று முதல் 16 வழித்தடங்களில் 32 பஸ்கள்

மாணவர் பிரத்யேக பஸ்கள் மேலும் அதிகரிப்பு இன்று முதல் 16 வழித்தடங்களில் 32 பஸ்கள்

சென்னை : 'தினமலர்' சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, நெரிசல் மிகுந்த மாநகர பஸ்களில் சிக்கி, மாணவர்கள் அல்லல்படுவதைத் தடுக்க, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், புறநகர் பகுதிகளையும் இணைந்து, மேலும் 16 வழித்தடங்களில், 32 மாணவர் பிரத்யேக பஸ்களை இன்று முதல் இயக்குகிறது.சென்னை மக்களின் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, மாநகர போக்குவரத்துக் கழகம், 3,300 பஸ்களை இயக்கி வருகிறது. தேவைக்கேற்ப பஸ்களை இயக்கினாலும், காலை, மாலை 'பீக்-அவர்' நேரங்களில், பஸ்களில் தொங்கிக் கொண்டு, பயணம் செய்யும் நிலை இருந்து வருகிறது. பள்ளி செல்லும்போதும், திரும்பும்போதும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விபத்துகளும் அதிகரித்து வந்தன.இதற்குத் தீர்வு காணும் வகையில், மாநகர போக்குவரத்துக்கழகம், மாணவர்களுக்கான பிரத்யேக பஸ்களை இயக்க முடிவு செய்தது. இதன்படி, சென்னையில், 12 வழித்தடங்களில், 48 மாணவர் பிரத்யேக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த பஸ்களுக்கு மாணவர், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுபோன்று புறநகர் பகுதிகளிலும், மாணவர் பிரத்யேக பஸ்களை இயக்க வேண்டுமென்று, மாணவர், பெற்றோர் விருப்பம் தெரிவித்தனர்.இதுகுறித்து, சமீபத்தில் 'தினமலர்' நாளிதழிலில், படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், மாணவர் பிரத்யேக பஸ்களை, எந்தெந்த ரூட்களில் விடலாம் என்பது குறித்து, தொடர் ஆய்வு நடத்தி வந்தது.தற்போது, மேலும் 16 வழித்தடங்களில், 32 பிரத்யேக பஸ்களை, இன்று (ஆக.,1) முதல் இயக்க, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. திருவொற்றியூர், மணலி, முகப்பேர் மேற்கு, ஐ.ஓ.சி., உள்ளிட்ட பகுதிகளுக்கும், பிரத்கேய பஸ்கள் விடப்படுகின்றன. புதிய வழித்தடங்கள் குறித்த அறிவிப்பை, மேலாண் இயக்குனர் பூபதி நேற்று வெளியிட்டார்.சென்னை மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளுக்கும், மாணவர் பிரத்யேக பஸ்கள் விடப்பட்டுள்ளது, மாணவர், பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை