உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் கிடந்த ரூ.17 ஆயிரம்

சாலையில் கிடந்த ரூ.17 ஆயிரம்

சென்னை : தி.நகரில் ரோட்டில் அனாதையாக கிடந்த, 17 ஆயிரம் ரூபாயை உரிமை கோரி யாரும் வராததால், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சென்னையின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான தி.நகரில், போக்குவரத்து எஸ்.ஐ., பாண்டிவேலு, நேற்று முன்தினம் மாலை, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர், ஜி.ஆர். டி., நகை மாளிகை அருகே வரும் போது, சாலையில் 17 ஆயிரம் ரூபாய் பண்டலாக கட்டி, அனாதையாக கிடந்தது. இதனை கவனித்த அவர், பணத்தை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில், ரோட்டில் தவறவிடப்பட்ட பணம் குறித்து யாரும் புகார் தெரிவிக்காததால், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தார். இந்த பணத்தை, தவற விட்டவர்கள் சரியான தகவல் கூறி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை