உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வி.ஏ.ஓ., தேர்வில் முறைகேடு: விசாரணை கமிஷன் கோரி மனு

வி.ஏ.ஓ., தேர்வில் முறைகேடு: விசாரணை கமிஷன் கோரி மனு

சென்னை : ''வி.ஏ.ஓ., மற்றும் குரூப் 2 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து, விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்'' என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ., தேர்வில் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி நடந்த வி.ஏ.ஓ., தேர்வை, 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதன் முடிவு, ஜூலை 19ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு, தி.மு.க., ஆட்சியில் நடந்ததால், பல விதமான முறைகேடுகள் நடந்திருக்கலாம். போட்டித் தேர்வுக்கு நன்றாகப் படித்துத் தேர்வு எழுதியும், தோல்வியுற்றுள்ள நாங்கள், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதேபோல், டி.என்.பி.சி., குரூப் - 2 தேர்வில், கடலூர் மாவட்டத்தில் முன்கூட்டியே வினாத்தாள் மற்றும் விடைகள் வெளியானதாக, செய்திகள் வெளியாகின. தேர்வு மையங்களில், மொபைல்போன் பயன்பாடு அதிகமாகவே இருந்தது. எஸ்.எம்.எஸ்., மூலம், செய்திகள் பரிமாற்றம் நடந்துள்ளது. இதையெல்லாம், தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்டு கொள்ளவில்லை. இது குறித்து, முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர, விசாரணைக் கமிஷன் அமைத்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விடைத்தாள்களின் நகல்களை வெளியிடவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி