உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் மின்சார பஸ்கள் சேவை 30ம் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

சென்னையில் மின்சார பஸ்கள் சேவை 30ம் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

சென்னை,சென்னையில் முதல் முறையாக, 120 மின்சார பஸ்களின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் வரும் 30ம் தேதி துவங்கி வைக்க உள்ளார்.சென்னை பயணியர் தேவையை போக்கும் வகையில், தனியார் பங்களிப்போடு, 1,100 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. முதல்கட்டமாக, 500 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க, ஒப்பந்தம் செய்து, தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.இதுவரையில், 'ஏசி' வசதியுள்ள, 'ஏசி' வசதி இல்லாத 120க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் பெரும்பாக்கம், வியாசர்பாடி பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனை, வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில் சார்ஜிங் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, வியாசர்பாடி பணிமனையில், முதற்கட்டமாக, 120 மின்சார பேருந்துகளை, முதல்வர் ஸ்டாலின் வரும் 30ம் தேதி துவங்கி வைக்க உள்ளார். மீதமுள்ள பேருந்துகளும் படிப்படியாக துவங்கி வைக்கப்பட உள்ளது.'இந்த பேருந்துகளில் பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது, வழக்கமான கட்டணத்தில் பயணிக்கலாம் என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.**


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை