உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.18.20 கோடி மதிப்பிலான பாரின் சிகரெட்டு பறிமுதல்

ரூ.18.20 கோடி மதிப்பிலான பாரின் சிகரெட்டு பறிமுதல்

சென்னை,துபாயில் இருந்து கடத்தி வந்த 18.20 கோடி ரூபாய் மதிப்பிலான, 92 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருந்து, கடல் வழியாக சென்னைக்கு விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டதாக, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு, நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டி.ஆர்.ஐ., அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள 'ஜெ.மாடாடீ' என்ற பெயர் கொண்ட கிடங்கில் சிகரெட் வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற அதிகாரிகள், கன்டெய்னர் ஒன்றை திறந்து ஆய்வு செய்தபோது, அதில் கழிப்பறை சாதனங்கள் என எழுதப்பட்டிருந்தன. பார்சல்களை பிரித்து பார்த்ததில் வெளிநாட்டு சிகிரெட்டுகள் இருந்தன. கணக்கிட்டு பார்த்ததில் 92.10 லட்சம் எண்ணிக்கையில் இருந்தது. அதன் மதிப்பு 18.20 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி