| ADDED : நவ 17, 2025 03:26 AM
சென்னை:: புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். அவரின் மனைவி மகேஸ்வரி: கடந்த ஆண்டு, டிச., 12ம் தேதி, புதுவண்ணாரப்பேட்டை எஸ்.எஸ்.செட்டி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, அதிவேகமாக சென்ற சரக்கு வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தொடர்ந்து, மகேஸ்வரியின் கணவர், '49 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேல், சரக்கு வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடந்து உள்ளது. இதனால், மனுதாரருக்கு, 8.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.