உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1.60 கோடி கேட்டு வரதட்சணை கொடுமை குமரி வாலிபர் மீது திருவொற்றியூரில் புகார்

ரூ.1.60 கோடி கேட்டு வரதட்சணை கொடுமை குமரி வாலிபர் மீது திருவொற்றியூரில் புகார்

திருவொற்றியூர்:மனைவியிடம் 1.60 கோடி ரூபாய், 7 சென்ட் நிலம் கேட்டு வரதட்சணை கொடுமைப்படுத்திய, கன்னியாகுமரி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் ரேச்சல், 32. இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மரிய ஜோஸ் சாஜின், 34, என்பவருக்கும், 2023 ஜன., 2ம் தேதி நாகர்கோவிலில் திருமணம் நடந்துள்ளது.ஹாங்காங்கில், வங்கி மேலாளராக பணியாற்றும் மரிய ஜோஸ் சாஜின், திருமணமான ஒரு மாதம் கன்னியாகுமரியில் இருந்துள்ளார். பின், மனைவியுடன் ஹாங்காங் சென்று விட்டார்.இதற்கிடையில், வரதட்சணையாக, மாப்பிள்ளை வீட்டாருக்கு 215 சவரன் தங்க நகைகள், 10 லட்ச ரூபாய் மற்றும் 'ஹூண்டாய் வென்யூ' கார் உள்ளிட்டவை வழங்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், ஹாங்காங்கில் வசித்த மரிய ஜோஸ் சாஜின், தன் மனைவியிடம், 1.60 கோடி ரூபாய் மற்றும் ஏழு சென்ட் நிலம் கேட்டு துன்புறுத்தியுள்ளார்.கடந்தாண்டு, ஜூன் 13ம் தேதி, ஹாங்காங்கில் இருந்து அப்பெண், திருவொற்றியூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து விட்டார். மரிய ஜோஸ் சாஜின் மற்றும் அவர் குடும்பத்தார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என, திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ரேச்சல் மனுதாக்கல் செய்திருந்தார்.நீதிமன்ற உத்தரவின்படி, திருவொற்றியூர் மகளிர் போலீசார், இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை