உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஐ.டி., ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி தம்பதி கைது

 ஐ.டி., ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி தம்பதி கைது

வியாசர்பாடி: வியாசர்பாடி, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன், 28. தனியார் ஐ.டி., நிறுவன ஊழியர். இவரும், வியாசர்பாடி, பி.வி., காலனியை சேர்ந்த பவித்ரனும் நண்பர்கள். கடந்த 2024, ஜூலையில், புதிய தொழில் துவங்க உள்ளதாகவும், அதற்கு பணம் உதவி செய்யும்படியும் ஜெகநாதனிடம், பவித்ரனும், அவரது மனைவி கேத்ரினும் கேட்டனர். இதை நம்பிய ஜெகநாதன், கடந்த ஜூலை 1ம் தேதி, தன் பெயரில் எச்.டி.எப்.சி., வங்கியில், 10.76 லட்சம் வங்கி கடன் பெற்று கொடுத்துள்ளார். பின், பணத்தை வாங்கிய பவித்ரன் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து ஜெகநாதன், கடந்த மார்ச் 16ம் தேதி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விசாரித்த நீதிபதிகள், கடந்த செப்., 11 தேதி, வழக்கை பதிவு செய்யுமாறு, எம்.கே.பி., நகர் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி விசாரித்த போலீசார், பணம் வாங்கி ஏமாற்றிய பவித்ரன், 28, அவரின் மனைவி கேத்ரின், 26, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை