உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர்போர்ட் வெளியே தள்ளுவண்டி உணவகங்கள் குப்பையை சாலையில் கொட்டுவதால் அபாயம்

ஏர்போர்ட் வெளியே தள்ளுவண்டி உணவகங்கள் குப்பையை சாலையில் கொட்டுவதால் அபாயம்

சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு வெளியே ஆக்கிரமித்து தள்ளுவண்டி உணவகங்கள் செயல்பட்டு வருவதால், அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்திற்கு தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக, விமான நிலைய வெளி வளாகங்களைச் சுற்றி பெரும்பாலும் எந்த கடைகளும் இருக்காது. அதிலும் இறைச்சி கடை போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது.இதற்கிடையே, சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள பி.வி.ஆர்., திரையரங்கம் பகுதியில், தள்ளுவண்டி கடைகள் அதிகம் முளைத்துள்ளன.நடைபாதையை ஆக்கிரமித்து, சாலையை ஒட்டி இக்கடைகளை நடத்துவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. தவிர, கடை உரிமையாளர்கள் முட்டை மற்றும் இறைச்சி கழிவுகளை சாலையிலேயே கொட்டி செல்கின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னை விமான நிலையம் எதிரே உள்ள சாலையில், ஆளுங்கட்சி நிர்வாகிகள் உதவியுடன் சிலர், நடைபாதையை ஆக்கிரமித்து ஐந்துக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி உணவு கடைகளை நடத்தி வருகின்றனர். இதற்கு முறையான எந்த அனுமதியும் பெறவில்லை.பல்லாவரம் மாநகராட்சி மற்றும் பல்லாவரம் போலீசாருக்கு 'கவனிப்பு' சரியாக செய்வதால், அவர்கள் இது குறித்து கண்டுகொள்வதில்லை. குறிப்பாக மாலை 6:00 மணிக்கு துவங்கி இரவு முழுதும் கடைகள் செயல்படுகின்றன.வாகனங்களில் வருவோர், அங்கேயே அவற்றை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பொதுவாக உணவகங்களில் கழிவுகளை முறையாக பிரித்து குப்பையில் சேர்ப்பர். ஆனால் இங்கு செயல்படும் தள்ளுவண்டி கடைகள், முட்டை, இறைச்சி, மீதமான காய்கறி கழிவுகளை சாலையிலேயே போட்டு செல்கின்றனர்.இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சாலையை ஆக்கிரமித்து செயல்படும் கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kumar
ஜூலை 14, 2025 08:46

இந்த கடைகளின் உணவுக்குப்பைகளுக்காக பறவைகள் அதிகமாக கூட்டம் சேரும். இந்த பறவைகள், விமான தளங்களில் பறந்து இன்ஜினுக்குள் சிக்கி விமானிகள் விபத்துக்குள்ளாக்கும் பேரபாயமும் இருக்கிறது. இந்த கடைக்காரர் போடும் பிச்சைக்காக , இந்த கடைகளை மூடாமலும், குறைந்த பட்சம் குப்பை காட்டுவதையும், போக்குவரத்தையும் நேரேயுப்படுத்தாமலும் இருக்கும் காவல் துறை, ஏற்படும் விமான விபத்துக்குலுக்கும் பொறுப்பேற்க வேண்டும். காவல் நிலையங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்களின் பெயர்களை அறிவியுங்கள். எதிர்காலத்தில் அவர்களை மக்கள் மன்றம் கூண்டில் ஏற்றட்டும் .


tiny
ஜூலை 14, 2025 06:39

100%


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை