| ADDED : ஆக 11, 2012 03:07 AM
சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு எதிராக, அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த மாதம் 30ம் தேதி வெளியான தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுப்பதாக, கருணாநிதி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்த மனுவில், 'முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் இந்தச் செய்தி உள்ளது. எங்கு தங்கியிருந்தாலும், தனது அலுவலக மற்றும் அரசியலமைப்புச் சட்ட கடமைகளை முதல்வர் தொடர்ந்து ஆற்றி வருகிறார்' என்று கூறப்பட்டுள்ளது.அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக, 'முரசொலி' ஆசிரியர் செல்வம் மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.