| ADDED : டிச 05, 2025 07:03 AM
சென்னை: கல்வியாளர் டாக்டர் திருமதி ஒய்.ஜி.பி., நுாற்றாண்டு விழாவை ஒட்டி, மூன்று நாள் இசை மற்றும் நடன விழா நாளை துவங்குகிறது. பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளிகள் குழுமம் சார்பில், கல்வியாளர் திருமதி ஒய்.ஜி.பி., நுாற்றாண்டை ஒட்டி, 'பதம்' என்ற தலைப்பில், மூன்று நாள், இசை மற்றும் நடன விழா, கே.கே.நகரில் உள்ள டாக்டர் ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியத்தில் நாளை துவங்குகிறது. இதில், பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி முன்னாள் மாணவர்களின் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. அந்த வகையில், பிரபலங்களின் கர்நாடக இசை கச்சேரி, பரதநாட்டியம் மற்றும் வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில், தலைமை விருந்தினராக ஜவுளி வர்த்தகர் நல்லிகுப்புசாமி, சிறப்பு விருந்தினராக இசை கலைஞர் அனில் சீனிவாசன் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியை, 'சங்கீத கலாநிதி, சங்கீத சூடாமணி, கலைமாமணி' விருதுகள் உட்பட பல கவுரவங்களை பெற்ற பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இணைந்து நடத்த உள்ளனர்.