உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கீழ்க்கட்டளை, பெருங்களத்துாரில் வெள்ளம் பாம்பு, விஷ பூச்சிகளால் மக்கள் பாதிப்பு

 கீழ்க்கட்டளை, பெருங்களத்துாரில் வெள்ளம் பாம்பு, விஷ பூச்சிகளால் மக்கள் பாதிப்பு

பெருங்களத்துார்: தொடர் மழையில், தாம்பரத்தை அடுத்த பெருங்களத்துார் எஸ்.எஸ்.எம்., நகர், சேஷாத்திரி நகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப் புகளில் மழைநீர் புகுந்ததால், அங்கு வசிப்போர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குடியிருப்புகளை சுற்றி, முழங்கால் அளவு தேங்கியுள்ள தண்ணீரிலேயே நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் தேங்கியுள்ளதால், அவசரத்திற்கு ஆட்டோ, கால்டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இப்பகுதிக்கு வரவில்லை. மற்றொரு புறம், பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் புகுந்து அட்டகாசம் செய்வதால், அங்கு வசிப்போர், வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். ஒவ்வொரு மழையின் போதும், இப்பகுதியில் வெள்ளம் தேங்குவது வாடிக்கையாக இருந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதற்கு தீர்வு காணவில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல், தாம்பரம் மாநகராட்சி, 19வது வார்டு, சவுந்தரராஜன் நகர், துரைசாமி நகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது. கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வெளியே வர முடியா த சூழலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை