உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனநலம் பாதித்த பெண் உறவினரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதித்த பெண் உறவினரிடம் ஒப்படைப்பு

மாதவரம்,கும்பகோணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சுதாகர் என்பவரின் ஆட்டோவில் ஏறி மாதவரம் பயணித்தார். அவர் கூறிய முகவரியில் யாரும் இல்லை என தெரிந்தது.இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிந்ததால், மாதவரம், பஜார் அருகே ஒரு உள்ள சாந்தி என்பவர் வீட்டில் இறக்கிவிட்டு பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கூறி சென்றார்.நேற்று காலை, சுதாகர், சாந்தி ஆகியோர் இளம் பெண்ணை மாதவரம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணைக்கு பின் மாதவரத்தில் உள்ள இளம் பெண்ணின் தாத்தா சிவகுமாரிடம் அப்பெண்ணை ஒப்படைத்தனர். இளம் பெண்ணை பத்திரமாக மீட்டு உறவினரிடம் சேர்க்க உதவிய ஆட்டோ ஓட்டுனரை அனைவரும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை