உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கத்துக்கு சொகுசு கட்டண பஸ்கள் அதிகரித்து இயக்கம்: பயணியர் அவதி  

கிளாம்பாக்கத்துக்கு சொகுசு கட்டண பஸ்கள் அதிகரித்து இயக்கம்: பயணியர் அவதி  

சென்னை, சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு சொகுசு கட்டண பஸ்கள் அதிகரித்து இயக்குவதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.பொங்கல் பண்டிகையொட்டி, சொந்த ஊருக்கு அதிகளவில் மக்கள் புறப்பட்டு செல்கின்றனர். பயணியரின் வசதிக்காக, கோயம்பேடு, கிளாம்பாக்கம், பூந்தமல்லி, கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் சான்டோரியம் ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் பிரித்து இயக்கப்படுகின்றன. மேற்கண்ட நிலையங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும், மாநகர பஸ்களோடு, 450 இணைப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதில், கிளாம்பாக்கத்துக்கு இயக்கப்படும் பஸ்களில் சொகுசு கட்டண பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. மாநகர போக்குவரத்து கழகத்தின் புள்ளிவிவரத்தின் படி, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 503 சாதாரண கட்டண பஸ் சர்வீஸ்களும், 1065 சொகுசு பஸ் சர்வீஸ்களும், 91 விரைவு கட்டண பஸ்களும், 32 'ஏசி' பஸ் சர்வீஸ்கள் என 37 வழித்தடங்களில் 1691 பஸ் சர்வீஸ் இயக்கப்படுகின்றன.சாதாரண பஸ்கள் அதிகரிக்க கோரிக்கை:இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை போன்ற பிரதான சாலை வழியாக செல்லும் பஸ்களில் சொகுசு கட்டண பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இதனால், பயணியர் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக, வடசென்னையில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல இரண்டு பஸ்களை மாறி சென்றாலே, 60 ரூபாய் கட்டணம் ஆகி விடுகிறது. எனவே, கிளாம்பாக்கத்தில் இருந்து சாதாரண கட்டண பஸ்களை அதிகரித்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ