உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ.டி.எம்.,மில் பல லட்சம் டிபாசிட் இருவரிடம் விசாரணை ஏ.டி.எம்.,மில் பல லட்சம் ரூபாய் டிபாசிட்: ஆலந்துாரில் சிக்கிய இருவரிடம் விசாரணை

ஏ.டி.எம்.,மில் பல லட்சம் டிபாசிட் இருவரிடம் விசாரணை ஏ.டி.எம்.,மில் பல லட்சம் ரூபாய் டிபாசிட்: ஆலந்துாரில் சிக்கிய இருவரிடம் விசாரணை

ஆலந்துார், சென்னை, ஆலந்துார், எம்.கே.என். சாலையில் உள்ள பிரபல வங்கி ஒன்றின் ஏ.டி.எம்., டிபாசிட் இயந்திரத்தில், இரண்டு நபர்கள் நீண்ட நேரமாக பணம் செலுத்திக் கொண்டிருந்தனர். இதனால் பணம் எடுக்க வந்தவர்கள் காத்திருந்தனர். உள்ளே இருந்த இருவரும், கட்டுக்கட்டாக தொடர்ந்து பல முறை பணம் செலுத்துவதை பார்த்து, சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு விரைந்த பரங்கிமலை போலீசார், இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ரக்பி, 23, முகமது யாசின்,22 என்பது தெரியவந்தது.சென்னை, பாரிமுனையை சேர்ந்த ஒரு நபர், தினமும் பை நிறைய பணம் கொடுத்து, அதை அவர் கூறும் வங்கி கணக்கில் செலுத்தினால், தினசரி 600 ரூபாய் சம்பளம் தருவதாக தெரிவித்துள்ளனர். அதன் படி, நேற்று அசோக் பில்லர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏ.டி.எம்.,களில், 15 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர். பின், பரங்கிமலை பகுதியில் 15 லட்சம் ரூபாயை டிபாசிட் செலுத்த வந்துள்ளனர். ஐந்து லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து, 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, மேல் விசாரணைக்காக இருவரையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இதே போல, பணம் டிபாசிட் செய்வதில் மேலும் சில இளைஞர்கள் வேலை செய்வதாக கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை