மேலும் செய்திகள்
தண்டவாள பராமரிப்பு பணி: ரயில்கள் தாமதம்
17-Apr-2025
தண்டவாளத்தில் 'வாக்கிங்'; ஆபத்தில் பயணியர்
21-Apr-2025
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலத்தில், 2 முதல் 10 வரையிலான வார்டுகள் மற்றும் 12 மற்றும் 13ம் வார்டுகளில், தண்டவாளங்களை ஒட்டி பல தெருக்கள் உள்ளன. இங்கு, இரவு வேளைகளில் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், வழிப்பறி அச்சம், குற்றச்சம்பவங்கள் அரங்கேறும் நிலை உள்ளது. மேலும், இரவு நேரத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் மோதி உயிருக்கு போராடுபவர்களை மீட்க கூட முடியாத நிலையில், கும்மிருட்டாக உள்ளது. மண்டலம் முழுதும் தெருவிளக்குகள் அமைக்கும் மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள், இங்கு மட்டும் தெருவிளக்குகள் அமைப்பதில்லை.இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, ரயில்வே நிர்வாகம், தண்டவாளங்களை ஒட்டி தெருவிளக்குகள் அமைப்பதற்கு அனுமதி அளிப்பது கிடையாது. இதன் காரணமாகவே, இங்கு தெருவிளக்குகள் அமைக்க முடிவதில்லை. ரயில்வேயிடம் அனுமதி பெற்றால், நிச்சயம் தெருவிளக்குகள் அமைக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க முடியும் என கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
17-Apr-2025
21-Apr-2025