உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஜுவல்லர்ஸ் சாம்பியன் கிரிக்கெட்: பி.எம்.பட்டாலியன்ஸ் அசத்தல்

 ஜுவல்லர்ஸ் சாம்பியன் கிரிக்கெட்: பி.எம்.பட்டாலியன்ஸ் அசத்தல்

சென்னை: சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் சார்பில், ஜுவல்லரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, ஜெ.சி.எல்., எனும் 'ஜுவல்லர்ஸ் சாம்பியன் கிரிக்கெட் லீக்' போட்டி, பெரம்பூர் எஸ்.பி.ஆர்., சிட்டியில், நேற்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடந்த இப்போட்டியில், மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாக மோதின. ஒரு அணியில் 11 பேர் இருந்தாலும், மைதானத்தில் இறங்கியது 8 பேர் மட்டுமே என்பதால், ஒவ்வொரு ஓவரும் 'த்ரில்'லா க இருந்தது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில், நகோடா சூப்பர் கிங்ஸ் அணியை, பி.எம்.பட்டாலியன்ஸ் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில், பிதாலியன் வாரியர்ஸ் அணி, ஜுவல்பிக்ஸ் டிஜிகோல்ட் கிங்ஸ் அணியை பந்தாடி இறுதிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில், பிதாலியன் வாரியர்ஸ் மற்றும் பி.எம்.பட்டாலியன் ஸ் அணிகள் மோதின. மாலை நடந்த இறுதி போட்டியில், 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த பி.எம்.பட்டாலியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பிதாலியன் வாரியர்ஸ் அணி, 8 ஓவர்களில், ஆறு விக்கெட் இழப்பிற்கு, 84 ரன்கள் அடித்தது. பின், இலக்கை நோக்கி இறங்கிய பி.எம்.பட்டாலியன்ஸ் அணி, துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பவர் பிளே-யிலேயே அதிக ரன்களை குவித்த அந்த அணி வீரர்கள், பிதாலியன் வாரியர்ஸின் எந்த பந்துவீச்சாளருக்கும் இடமளிக்கவில்லை. வெறும் 5.2 ஓவர்களில், 1 விக்கெட் மட்டுமே இழந்து, 90 ரன்கள் குவித்து, மிக வலுவான வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கும், சிறந்த வீரர்களுக்கும், வேல்ஸ் பல்கலை நிறுவனரும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான ஐசரி கணேஷ் கோப்பையை வழங்கினார். சாம்பியன் பட்டம் வென்ற பி.எம்.பட்டாலியன்ஸ் அணிக்கு, 4 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடத்தைப் பிடித்த பிதாலியன் வாரியர்ஸ் அணிக்கு, 2 லட்சம் ரூபாயும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, சங்க செயலர் கோல்டு குரு சாந்தகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி