உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கடனை திருப்பி தராததால் வாலிபரை கடத்தியவர் கைது

 கடனை திருப்பி தராததால் வாலிபரை கடத்தியவர் கைது

வியாசர்பாடி: வியாசர்பாடியில், கொடுத்த கடன் தொகையை திரும்ப தராத ஆத்திரத்தில், வாலிபரை காரில் கடத்தியவரை, போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடியைச் சேர்ந்தவர் முகேஷ், 33; ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் சூளை, ஏ.பி.சாலையைச் சேர்ந்த ராஜேஷ் ஜெயின், 39; என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அதில், எட்டு லட்சம் ரூபாய் திருப்பி கொடுத்த நிலையில், மீதி, இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், வீட்டிற்கு வெளியே நேற்று, குப்பை கொட்ட வந்த முகேஷை, காரில் வந்த ராஜேஷ் ஜெயின், தன்னுடன் வரும்படி மிரட்டி அழைத்துள்ளார் . காரில் ஏறிய முகேஷிடம் பணத்தை கேட்டு, அவரது கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் தங்க செயின் மற்றும் 10 லட்சம் ரூபாய் பெற்றதாக வெற்று பத்திரத்தில் கை யெழுத்து வாங்கி, முகேஷை அவரது வீட்டிலேயே இறக்கிவிட்டு சென்றார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, சூளை, ஏ.பி.சாலையை சேர்ந்த ராஜேஷ் ஜெயினை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ