ராஜகோபுர பணிக்கு அடிக்கல் நாகாலாந்து கவர்னர் பங்கேற்பு
வளசரவாக்கம்,வளசரவாக்கத்தில் லட்சுமி விநாயகர் மற்றும் காரியசித்தி ஆஞ்சநேயர் கோவிலில், ராஜகோபுரம் அமைக்கும் பணிக்கு, நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் அடிக்கல் நாட்டினார்.வளசரவாக்கம் காமகோடி நகரில், லட்சுமி விநாயகர் மற்றும் காரியசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் சாலை மட்டத்தில் இருந்து 5 அடி பள்ளத்தில் இருந்தது.இதையடுத்து, கோவிலின் சேதப்பகுதியை மட்டும் அகற்றி, 5 அடி உயர்த்தி கருங்கற்களால் கோவில் அமைக்கும் திருப்பணி நடந்து வருகிறது.அறநிலையத்துறை மேற்பார்வையில், காமகோடி நகர் பக்த ஜெனசபா தலைமையில், 3 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ராஜகோபுரம் அமைக்கும் பணிக்காக, நேற்று பாலாலயம் நடந்தது. இதில், நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பங்கேற்று, அடிக்கல் நாட்டினார்.