உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நாளை நந்தி கல்யாணம்

ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நாளை நந்தி கல்யாணம்

பள்ளிக்கரணை:சிவபெருமானின் மெய்க்காப்பாளரான நந்தியம் பெருமாள் - சுயம்பிரகாசாம்பிகையின் திருக்கல்யாணம், பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோவிலில் மார்ச் 19ல் நடக்கிறது.விழா நிர்வாகி கூறியதாவது:நாளை மாலை 4:30 மணிக்கு பள்ளிக்கரணை லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை ஊர்வலம் புறப்பட்டு, சிவன் கோவிலை வந்தடைகிறது.தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு நாதஸ்வரம், கயிலாய வாத்தியம் முழங்க, நந்தியம் பெருமாள் - சுயம்பிரகாசாம்பிகை திருக்கல்யாணம், தீபாராதனை நடக்க உள்ளது.பின், திருமண விருந்தும் தொடர்ந்து, இரவு 8:30 மணிக்கு நந்தியம் பெருமான் தம்பதியின் மணக்கோல வீதியுலாவும் நடக்கிறது.அரியலுார் மாவட்டம், திருமழபாடியைத் தொடர்ந்து பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் மட்டுமே, நந்தி கல்யாணம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

G Sundaresan
மார் 18, 2024 17:34

இல்லை. மற்றோரு இடத்திலும் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் காரைக்குடிக்கு அருகில் உள்ள மாத்தூர், நகரத்தார்களுக்கு சொந்தமான ஓன்பது நகரக் கோவில்களுள் ஒன்று மாத்தூர்.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ