உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஊர்க்காவல் படையில் சேவையாற்ற வாய்ப்பு

ஊர்க்காவல் படையில் சேவையாற்ற வாய்ப்பு

சென்னை, சென்னை ஊர்க்காவல் படையில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர், 18 - 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்களாக இருக்கலாம்.குற்றப்பின்னணி இல்லாத, நன்னடத்தை உள்ளவர்களாகவும், சென்னையில் வசிப்பவர்களாகவும், குடும்ப அட்டை வைத்திருப்போராகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு, 45 நாட்கள், தினமும், ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பின் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.சீருடை, தொப்பி, ஷூ வழங்கப்படும். பகல், இரவு ரோந்து பணி, போக்குவரத்து சீர்செய்ய, 560 ரூபாய் வழங்கப்படும். தகுதி உடையவர்கள், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, அதே அலுவலகத்திற்கு அனுப்பலாம்.விபரங்களுக்கு, 94981 35190, 95667 76222 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை