உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூந்தமல்லி நகராட்சியில் வீணாகும் நலிந்தோருக்கான நடைபாதை கடைகள்

பூந்தமல்லி நகராட்சியில் வீணாகும் நலிந்தோருக்கான நடைபாதை கடைகள்

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில், 500க்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்கள் செயல்படுகின்றன. கொரோனா காலத்திற்குப் பின், கடைகளை மீண்டும் நடத்த பலருக்கும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், தற்போது 300க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் மட்டுமே செயல்படுகின்றன.தவிர, பூந்தமல்லி -- கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், தெருவோர வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.இந்நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தெருவோர வியாபாரிகளுக்கு கடை வழங்க, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு முடிவெடுத்தது.அதன்படி, கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில், பூந்தமல்லி நகராட்சிக்கு 30 கடைகள் ஒதுக்கப்பட்டன. இந்த கடைகள், கடந்த ஓராண்டிற்கும் மேலாக மழை, வெயிலில், நகராட்சி அலுவலகத்தில் வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ளதால், துருப்பிடித்து முகப்புகள் உடைந்து பாழாகி வருகின்றன.இது குறித்து கடந்த ஆண்டு, அதிகாரிகளிடம் கேட்ட போது, கடைகள் வழங்குவது தொடர்பாக சரியான நபர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருவதாகவும், அரசியல் தலையீடு இல்லாமல் உரியவர்களை தேர்ந்தெடுப்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.ஆனால், கடந்த ஓராண்டாக முன்கள பணிகள் நடந்த நிலையில், பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் இன்று வரை அக்கடைகளை வழங்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், அரசால் வழங்கப்பட்ட, 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நலிந்தோருக்கான நடைபாதை கடைகள் பாழாகி வருவதாக, சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள், கடைகளை உரியவர்களிடம் வழங்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மேலும், இது தொடர்பாக பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமியும் கண்டும் காணாமல் இருப்பதால், நடைபாதை வியாபாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தெருவோர உணவகங்கள், அதாவது மிகச் சிறிய அளவில் கடை நடத்துவோருக்கு வடிவமைக்கப்பட்ட இந்த கடையின் நீளம் 7 அடி, அகலம் 3 அடி. இதில், கல்லாப்பெட்டி, ஒரு காஸ் வைக்கும் பகுதி மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட பொருட்கள் வைக்க இட வசதிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ