உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் காதலியுடன் தகராறு போலீஸ்காரர் தற்கொலை

போதையில் காதலியுடன் தகராறு போலீஸ்காரர் தற்கொலை

ஆவடி, மார்ச் 10-கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 27. இவர், ஆவடி அருகே திருமுல்லைவாயில் எஸ்.எம்.நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி, மணலி உதவி கமிஷனர் அலுவலகத்தில், கணினி ஆப்பரேட்டராக பணி புரிந்து வந்தார்.இவரும், அதே காவலர் குடியிருப்பில் உள்ள 25 வயது பெண் போலீசும் காதலித்துள்ளனர். இரு வீட்டார் சம்மதத்துடன், மே மாதம் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த விக்னேஷுக்கும், அவரது காதலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால், அவர் கோபித்துக் கொண்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ், அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருமுல்லைவாயில் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், 'திருமணம் நிச்சயிக்கப்பட்டதில் இருந்து, விக்னேஷ் காதலியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில், கோபித்து கொண்டு அப்பெண் சென்று விட, விக்னேஷ் மன உளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம்' என்றனர்.பணப் பிரச்னையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி