உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஆரம்ப சுகாதார மையம் மதுரவாயலில் இடமாற்றம்

 ஆரம்ப சுகாதார மையம் மதுரவாயலில் இடமாற்றம்

மதுரவாயல்: வளசரவாக்கம் மண்டலம், 144வது வார்டு மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்தது. போதிய இடவசதி இல்லாத, பழைய கட்டடம் என்பதால் புதிதாக கட்ட 1.80 கோடி ரூபாய்க்கு ஒப் பந்தம் விடப்பட்டுள்ளது. அதனால் பழைய கட்டடத்தை இடிக்கும் பணி துவங்கியுள்ளது. அதே இடத்தில், தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் புது ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், இங்கிருந்த ஆரம்ப சுகாதார மையம், மதுரவாயல் எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள நல்வாழ்வு மையத்திற்கு, தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ