உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாமரை குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாமரை குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

எண்ணுார், திருவொற்றியூர் மண்டலம், ஒன்றாவது வார்டு, எண்ணுார், ஜெ.ஜெ., நகர் பகுதியில், தாமரை குளம் உள்ளது.இக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.தீர்ப்பாயம் உத்தரவுபடி, 58 ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, அவற்றின் உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளாததால், காவல் துறையினர் உதவியுடன், திருவொற்றியூர் மண்டல உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் தலைமையிலான ஊழியர்கள், முதற்கட்டமாக, 13 ஆக்கிரமிப்புகளை, ஜே.சி.பி., இயந்திரத்தால் இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பு வீடுகள் தொடர்ச்சியாக இடித்து அகற்றப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி