உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரை தாக்கிய ரவுடிக்கு காப்பு

வாலிபரை தாக்கிய ரவுடிக்கு காப்பு

புளியந்தோப்பு:வாலிபரை வழிமறித்து தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன், 24. கடந்த 26ம் தேதி, ஒரு கும்பல் அவரை வழி மறித்து சரமாரியாக தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த மாதவன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், வழக்கில் தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு சிவராஜபுரத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி நவீன், 19, என்பவரை, புளியந்தோப்பு போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை