மேலும் செய்திகள்
சிவில் சர்வீஸ் கால்பந்து காலிறுதியில் தமிழக அணி
3 minutes ago
சீசன் டிக்கெட்டுக்கு சென்னை ஒன் செயலியில் சலுகை
4 minutes ago
18ல் அஞ்சல் துறை குறை தீர்வு முகாம்
6 minutes ago
இன்று இனிதாக ... (14.12.25) சென்னை
6 minutes ago
காசிமேடு, காசிமேடு, ஜி.எம்.பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், 2005ல் கட்டப்பட்டன. மூன்று மாடிகள் கொண்ட குடியிருப்புகளில், 552 வீடுகள் உள்ளன.ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். தற்போது, இந்த வீடுகள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. முறையாக குப்பை கழிவுகள் அகற்றப்படாததால், குடியிருப்புகளின் பின்புறம் உள்ள சிறிய இடத்தை, குடியிருப்புவாசிகள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், மலை போல குப்பை தேங்கியுள்ளது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறறப்படும்கழிவு நீரும் அங்கு பாய்ந்தோடி தேங்குகிறது. இதனால், கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுகளும் பரவி வருகின்றன. ஜி.எம்.பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு மக்களின் நல்வாழ்விற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:இங்கு, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளை கொட்ட, முறையான வழிகள் இன்றி உள்ளது. இதனால், வீடுகளில் சேரும் குப்பையை கொட்ட முறையான குப்பை தொட்டியும் இல்லை. குப்பையை சேகரிக்க ஆட்களும் சரிவர வருவதில்லை.எனவே, வீட்டின் பின்புறமே ஆண்டுக்கணக்கில் பொதுமக்கள் குப்பை கொட்டுகின்றனர். மேலும், இங்கு கழிவுநீர் குழாய்கள் உடைந்து கழிவுநீர் தேங்கி குளம் போல் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.இப்பகுதிக்கு, புதிதாக வரும் விருந்தினர்கள் வாந்தி எடுக்கும் அளவிற்கு, தாங்க முடியாத துர்நாற்றம் மற்றும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் வளாகமும் உள்ளது.சர்வசாதாரணமாக உலா வரும் எலிகளும், கொசு, ஈக்கள் தொல்லையும் அதிகரித்துள்ளன. மழை பெய்தால், நிலைமை மிகவும் மோசமாக மாறி விடுகிறது. வாழவே முடியாத நிலை உள்ளது. கழிவு நீருடன் குப்பையும் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 minutes ago
4 minutes ago
6 minutes ago
6 minutes ago