உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு லீசுக்கு விட்டு ரூ.7 லட்சம் மோசடி

வீடு லீசுக்கு விட்டு ரூ.7 லட்சம் மோசடி

ஆவடி, ஆவடி அடுத்த அண்ணனுார், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் கமல், 35; தனியார் நிறுவன ஊழியர்.இவர், கடந்த 2022ல் 'லீசு'க்கு வீடு தேடிய போது, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவருடன், 'ஆன்லைன்' வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.அப்போது, திருமுல்லைவாயில் பகுதியில் வீடு காலியாக இருப்பதாகக் கூறி,'லீஸ்' தொகையாக 10 லட்சம் ரூபாய் பேசியுள்ளார்.அதன்பின் பேரம் பேசிய சதீஷ் கமல், 7 லட்சம் ரூபாய் கொடுத்து, குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறியுள்ளார். இதையடுத்து, வீடு விற்பனைக்கு உள்ளதாகக் கூறி, அடிக்கடி பலர் வீட்டை வந்து பார்த்துச் சென்ற போது, தமிழ்வாணன் மற்றும் அவரது உறவினர் அருண்குமார் ஆகியோர் மோசடி செய்தது தெரிந்தது.இதுகுறித்து சதீஷ் கமல் அளித்த புகாரின்படி, தலைமறைவாக உள்ள இருவரையும் திருமுல்லைவாயில் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ