மேலும் செய்திகள்
ஆவடியில் 4 இன்ஸ்., இடமாற்றம்
4 hour(s) ago
செய்திகள் சில வரிகளில்
5 hour(s) ago
ஏரியில் மூழ்கி ஒருவர் பலி
5 hour(s) ago
சென்னை: பழைய நிலையிலேயே மாநகராட்சியில் பணி வழங்க வேண்டும் எனக்கூறி, துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மை பணி, தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரித்து, பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற அனு மதி பெற்று, நான்கு துாய்மை பணியாளர்கள், அம்பத்துாரில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, 200க்கும் மேற் பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: பழையபடி நாங்கள், தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் வகையில், பணி வழங்க வேண்டும். நான்கு மாதங்களாக இதே கோரிக்கை யை வலியுறுத்தி போராடி வருகிறோம். எங்கள் போராட்டங்களை அரசு தொடர்ந்து அலட்சியப் படுத்தி வருகிறது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago