உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பள்ளிக்கல்வி மாநில கூடைப்பந்து லேடி சிவசாமி பள்ளி முதலிடம்

 பள்ளிக்கல்வி மாநில கூடைப்பந்து லேடி சிவசாமி பள்ளி முதலிடம்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையின் மாநில கூடைப்பந்து போட்டியில், சென்னை அணியாக களமிறங்கிய லேடி சிவசாமி பள்ளி, முதலிடத்தை பிடித்து கோப்பையை வென்றது. தமிழக அரசின், பள்ளிக் கல்வித் துறை சார்பில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அதில், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகள், மாநில போட்டியில் பங்கேற்று வருகின்றன. அந்த வகையில், 17 வயதுக்கு உட்பட மாணவியருக்கான மாநில கூடைப்பந்து போட்டி, திருச்சியில் மூன்று நாட்கள் நடந்து நேற்று மாலை நிறைவடைந்தது. இதில், மாவட்ட அளவில் முதலிடங்களை பிடித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 40 அணிகள் பங்கேற்றன. சென்னை சார்பில், மயிலாப்பூர் லேடி சிவசாமி பள்ளி அணி பங்கேற்றது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 54 - 53 என்ற கணக்கில் துாத்துக்குடி அணியை வீழ்த்திய லேடி சிவசாமி பள்ளி, காலிறுதியில் 36 - 12 என்ற கணக்கில் மயிலாடுதுறை அணியை தோற்கடித்தது. அரையிறுதியில், 59 - 16 என்ற கணக்கில் தேனி மாவட்ட அணியையும் தோற்கடித்தது. இறுதிப்போட்டியில், லேடி சிவசாமி மற்றும் கோவை அணிகள் எதிர் கொண்டன. துவக்கம் முதல் இரு அணிகளும் சமநிலையில் புள்ளிகள் பெற்று வந்தன. இறுதியில், 69 - 67 என்ற கணக்கில் லேடி சிவசாமி அணி வெற்றி பெற்று, முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை