உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரின்ஸ் பள்ளியில் அறிவியல் கைவினை கண்காட்சி துவக்கம்

பிரின்ஸ் பள்ளியில் அறிவியல் கைவினை கண்காட்சி துவக்கம்

நங்கநல்லுார், நங்கநல்லுார் பிரின்ஸ் பள்ளியில், மாணவ - மாணவியரின் அறிவியல், கலை மற்றும் கைவினை கண்காட்சி நேற்று துவங்கியது. நங்கநல்லுார், பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவாரி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ - மாணவியரின் அறிவியல், கலை மற்றும் கைவினை கண்காட்சி - -2025 நேற்று துவங்கியது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது: சமுதாயத்தில் மாணவர்கள் உயர் நிலைய அடைய, கல்வியுடன் திறமையையும் வெளிப்படுத்த வேண்டும். அதை வெளிக்கொண்டு வரும் வகையில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், 64 அறைகளில் அரங்குகள் அமைத்து பிரமிக்க வைத்துள்ளனர். அனைத்து பிரிகளிலும் தங்களின் கண்டுபிடிப்புகளை, சிந்தனைகளை காட்சிப்படுத்தியுள்ளனர். மாணவ - மாணவியர் மொபைல் போன் பயன்பாட்டையும், முறையற்ற உணவையும் குறைத்து, தங்களின் சிந்தனை, திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., பாரதி பேசியபோது, “பிரின்ஸ் கல்விக் குழுமத்தில் படித்த பல்லாயிரக்கணக்கானோர், உலகின் பல நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்களில் உயர் பதவியை அலங்கரிக்கின்றனர்,” என, பாராட்டினார். விழாவில், பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் வாசுதேவன், ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன், கவுன்சிலர் தேவி, பள்ளி துணை தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று துவங்கிய இரண்டு நாள் கண்காட்சியில், சோலார் மின் உற்பத்தி, ஹைட்ராலிக் பாலம், மின்னணு சாதனங்கள், காற்று, நீரில் இருந்து மின்சாரம், மூலதனம், வர்த்தக புதுமை உள்ளிட்ட அனைத்து துறைகள் தொடர்பான செயல் திட்டங்களின் மாதிரியை தயாரித்து, மாணவர்கள் விளக்கமளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை