உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாநில டி20 கிரிக்கெட்: காலிறுதியில் செங்கை அணி

 மாநில டி20 கிரிக்கெட்: காலிறுதியில் செங்கை அணி

சென்னை: மாநில 'டி20' கிரிக்கெட் போட்டியில், செங்கல்பட்டு அணி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான எஸ்.எஸ்.ராஜன் 'டி20' கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இதன் கடைசி லீக் போட்டிகள், கடந்த வாரம் சென்னை, செங்குன்றத்தில் உள்ள கோஜன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், செங்கல்பட்டு அணி, திருவள்ளூர் அணியை எதிர்த்து மோதியது. முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்தது. இதையடுத்து கள மிறங்கிய செங்கல்பட்டு அணிக்கு துவக்க விக்கெட்டுகள் சரிந்தாலும், கணேஷ் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அந்த அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்து வெற்றி பெற்று, காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை