உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கேலோ இந்தியா தடகளத்தில் எஸ்.ஆர்.எம்., மாணவர் தங்கம்

 கேலோ இந்தியா தடகளத்தில் எஸ்.ஆர்.எம்., மாணவர் தங்கம்

சென்னை: ஜெய்ப்பூரில் நடந்து வரும், 'கேலோ இந்தியா' பல்கலை தடகள போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர் கோகுல் பாண்டியன், தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய பல்கலை கூட்ட மைப்பு இணைந்து, கேலோ இந்தியா பல்கலை விளையாட்டு போட்டிகளை, ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்தி வருகின்றன. ஜெய்ப்பூரில் நடக்கும் இதன் தடகள போட்டிகளில், பல மாநிலங்களைச் சேர்ந்த பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், ஆண்களுக் கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகம் சார்பில் போட்டியிட்ட சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர் கோகுல் பாண்டியன், 19, போட்டி துாரத்தை 21.30 வினாடிகளில் கடந்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை