உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அரசு பள்ளியில் துாய்மையற்ற கழிப்பறை; சுகாதார சீர்கேடால் தவிக்கும் மாணவர்கள்

 அரசு பள்ளியில் துாய்மையற்ற கழிப்பறை; சுகாதார சீர்கேடால் தவிக்கும் மாணவர்கள்

மேடவாக்கம்: மேடவாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள கழிப்பறைகள், பராமரிப்பின்றி அசுத்தமான நிலையில் உள்ளதால், மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேடவாக்கம். இந்த ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளக்கல் மற்றும் மேடவாக்கம் பகுதிகளில், இரு பிரிவுகளாக இயங்கி வருகிறது. இரு பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளிலும், தலா 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், மேடவாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள பள்ளியின் கழிப்பறைகள், பராமரிப்பின்றி, பயன்படுத்துவதற்கே லாயக்கற்ற நிலையில், துர்நாற்றம் வீசுகிறது. கழிப்பறையை பயன்படுத்தும் மாணவர்கள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக் கொண்டு செல்கின்றனர். பல மாணவர்கள் கழிப்பறையின் பின்புறம் உள்ள திறந்தவெளியில் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதுகுறித்து, சுத்தம் செய்ய ஆட்கள் வருவதே இல்லை. எப்பொழுதாவது வந்து, அரை குறையாக கடமைக்கு சுத்தம் செய்து செல்வதாக, மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வறுமையில் வாடும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வசதியின்றி, அரசு பள்ளியே கடைசி நம்பிக்கையாக சேர்த்து வருகின்றனர். இந்நிலையில், சுகாதாரமற்ற கழிப்பறைகளால் மாணவர்களுக்கு ஏற்படும் நோய் தொற்றால், அவர்களின் உடல்நிலையும், அவர்களின் கற்றலும் பாதிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு, சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை