உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலையில் காயத்துடன் வாலிபர் மர்ம மரணம்

தலையில் காயத்துடன் வாலிபர் மர்ம மரணம்

பெரம்பூர், பெரம்பூர், முகமதியார் தெருவில், நடைபாதையில் வசித்தவர் அல்டாப் உசேன், 32.நேற்று காலை 8:00 மணியளவில், முன்வர் பாஷா என்பவரின் வீட்டின் வாசலில், தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார்.திரு.வி.க. நகர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அல்டாப் உசேன் தினமும் இரவு அதே பகுதியில் உள்ள பள்ளிவாசலின் எதிரே உள்ள சமுதாயக்கூடத்தின் மொட்டை மாடியில் மது அருந்துவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.அவ்வாறு நேற்று முன்தினம் இரவு மது அருந்தி, மதுபோதையில் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கும் போது, தடுமாறி கீழே விழுந்ததும் தெரிய வந்தது. திரு.வி.க. நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை