உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கொடுங்கையூரில் பயங்கரவாதி பதுங்கல் பீதி கிளப்பியவர் கைது: டைரியில் மர்மம்

 கொடுங்கையூரில் பயங்கரவாதி பதுங்கல் பீதி கிளப்பியவர் கைது: டைரியில் மர்மம்

சென்னை: கொடுங்கையூரில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக பீதியை கிளப்பிய நபரின், அடையாளம் தெரிந்தது. எழும்பூரில் உள்ள மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, அவசர போலீஸ் உதவி எண் 100ல் மர்ம நபர் ஒருவர் நேற்று தொடர்புக் கொண்டார். அவர், கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் பயங்கரவாதி ஒருவர் பதுங்கி இருப்பதாக கூறி தொடர்பை துண்டித்துள்ளார். கொடுங்கையூர் போலீ சாருடன், சம்பவ இடத்தில் நுண்ணறிவு பிரிவு போலீ சாரும் களமிறக்கப்பட்டனர். இதற்கிடையே, சைபர் குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன், மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட செங்குன்றம் பகுதியில் சுற்றித்திருந்த பிரகாஷ், 40 என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து டைரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், காவல் துறை அதிகாரிகளின் மொபைல் போன் எண்கள் எழுதி வைத்திருப்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், மனநலம் பாதிக்கப் பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், அவருக்கு காவல் துறை உயர் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் கிடைத்தது எப்படி; பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக மிரட்டல் விடுத்தது ஏன் என்பது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி