உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கார் ஓட்டுநர் கொலை மூன்று பேர் கைது

 கார் ஓட்டுநர் கொலை மூன்று பேர் கைது

சென்னை: அரிவாளால் வெட்டப்பட்ட கார் ஓட்டுநர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, கொலையாளிகள் மூவரை, போலீசார் கைது செய்தனர். அபிராமபுரம், விசாலாட்சி தோட்டத்தைச் சேர்ந்தவர் மவுலி, 23; 'சி' பிரிவு ரவடி; கார் ஓட்டுநர். நேற்று முன்தினம் காலை, இருசக்கர வாகனத்தில், மந்தைவெளி ரயில் நிலையம் அருகே சென்றார். அவ ரை வழிமறித்த மூன்று பேர், அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மவுலியை, அபிராமபுரம் போலீசார் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மவுலி, நள்ளிரவு உயிரிழந்தார். போலீசார் 11 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், கவுதம், 1 9, விஜயகுமார், 21, நிரஞ்சன், 19, ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், மேற்கண்ட மூவர் மற்றும் மவுலி, இம்மாதம் 1ம் தேதி ஒன்றாக மது அருந்தினர். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மூவரும், திட்டமிட்டு, மவுலியை கொலை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி