உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுாரில் தலை துாக்கும் பேனர் கலாசாரம்

திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுாரில் தலை துாக்கும் பேனர் கலாசாரம்

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கத்துார், மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார், போளிவாக்கம், தொடுகாடு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.இந்த சாலை வழியே, தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள உயரமான கட்டடங்கள் மீது, பிரமாண்ட விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.மேலும், இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள மேல்நல்லாத்துார் ஊராட்சி மன்ற அலுவலகமே, விளம்பர மையமாகி வருகிறது. இதற்கு, அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என, வாகன ஓட்டிகள்குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும், நிகழ்ச்சி முடிந்தும் பல விளம்பர பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி