உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று (21.1. ஞாயிறு) இனிதாக

இன்று (21.1. ஞாயிறு) இனிதாக

ஆன்மிகம்--- உழவாரப்பணி: ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டத்தின் இறைபணி. காலை 9:00 முதல் பிற்பகல், 2:00 மணி வரை. இடம்: காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை. உழவாரப்பணி: சிவலோக நாயகன் உழவாரப் பணி மன்றத்தின் இறைபணி. காலை 8:00 மணி முதல். இடம்: சதானந்த சுவாமிகள் மடம், சதானந்தபுரம், பெருங்களத்துார். உழவாரப்பணி: அம்மை அப்பன் உழவாரப்பணி அறக்கட்டளையின் 132வது பணி. காலை முதல் மாலை வரை. இடம்: அகத்தீஸ்வரர் கோவில், தச்சூர் கூட்ரோடு, பஞ்செட்டி. திருமழிசையாழ்வார் சேவாகாலம் நேரம்: மாலை 4:45 மணிக்கு பார்த்தசாரதி பெருாள் பெரிய மாடவீதி புறப்பாடு. மாலை 6:15 மணிக்கு திருமழிசையாழ்வார் சேவாகாலம். இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.  வனபோஜன விழா நேரம்: காலை 10:00 மணிக்கு சிங்காரவேலர் வனபோஜன விழா. இடம்: மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மடம் சாலை, வனபோஜன மண்டபம். கூட்டு பிரார்த்தனை: உற்சவர் அபிஷேகம் - காலை 10:00 மணி. நாம ஜெபம், கூட்டுப் பிரார்த்தனை - மாலை 4:00 மணி. இடம்: அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், ஆதனுார். கூட்டு தியானம்: சாவித்திரி வாசித்தல், காலை 10:00 மணி. இடம்: அரவிந்தர் சொசைட்டி, 5, ஸ்மித் சாலை, அண்ணா சாலை - 2. மஹா சண்டி ஹோமம்: மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: சங்கர மடம், மேட்லி சாலை, மேற்கு மாம்பலம். இன்னிசை: பூமகள் தேவநாதன் குழுவினர் - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.-------------கலை விழா திருமலை - திருப்பதி கோவில்: புல்லாங்குழல் இசை: பதஞ்சலி, விஸ்வநாதன் - மாலை 5:15 மணி. நடனம்: பத்மா சுப்ரமணியன், பி.கண்ணன் குழுவினர் - மாலை 6:30 மணி. இடம்: தி.தி.தே., தகவல் மையம், வெங்கட் நாராயணா சாலை, தி.நகர். தியாக பிரம்ம கான சபா: பரதநாட்டியம்: ஹரிணி ராமலிங்கம் - மாலை 5:00 மணி. ஸ்ரீநிதி எம்.வி., - இரவு 7:00 மணி. இடம்: வாணி மஹால், ஜி.என்.ரோடு, தி.நகர்.  பிரம்ம கான சபா: பரதநாட்டியம்: ஜி.ஷத்விகா - மாலை 5:00 மணி. அர்ச்சனா நாராயண மூர்த்தி - மாலை 6:15 மணி. மீரா ஸ்ரீகாந்த் - இரவு 7:30 மணி. இடம்: பி.எஸ்.தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியம், ஆர்.கே.மடம் சாலை, மயிலாப்பூர்.பொது இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: அனைத்துலக சிவனடியார்கள் திருச்சபை சார்பிலான வகுப்பு: காலை 8:30 மணி. இடம்: மகான் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமி மடாலயம், அம்பேத்கர் கல்லுாரி எதிரில், வியாசர்பாடி. இலவச சங்கு நாத பயிற்சி: சங்கு நாதம் அறிவியல் வகுப்பு. காலை 7:00 முதல் காலை 9:00 மணி வரை. இடம்: டன்லப் திறந்தவெளி மைதானம், அம்பத்துார். இலவச கயிலாய வாத்திய பயிற்சி: காலை 10:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி.கண்காட்சி ஒய்.எம்.சி.ஏ., மைதானம்: புத்தக கண்காட்சி. பிற்பகல் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அண்ணா சாலை, நந்தனம். தீவுத்திடல்: சுற்றுலா பொருட்காட்சி. முற்பகல் முதல் இரவு வரை. இடம்: சென்னை. மீன்கள் கண்காட்சி: பொருட்காட்சி மற்றும் ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி. பிற்பகல், 3:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: ரயில்வே மைதானம், தாம்பரம். ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சிநேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை சிவாம்சம் சார்பில் ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி. இடம்: சங்கரா ஏ.சி., ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை. ஐ.சி.எப்.: ரயில்வே வரலாறு, இந்திய ரயில்களின் இயக்கம், தொழில்நுட்ப கண்காட்சி. நேரம்: காலை முதல் மாலை வரை. இடம்: ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர். ஏ.வி.எம்., ஸ்டூடியோ: சினிமா துறையில் பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படும் ஷூட்டிங் பொருட்கள். காலை 10:00 மணி முதல். இடம்: வடபழனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி