உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வடிகால்வாய் பள்ளத்தில் சிக்கிய லாரி

 வடிகால்வாய் பள்ளத்தில் சிக்கிய லாரி

திருநின்றவூர்: அரக்கோணம், காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 35. இவர், நேற்று முன்தினம் இரவு, அரக்கோணத்தில் இருந்து அம்பத்துாரில் உள்ள தனியார் யார்டுக்கு, லாரியில் 3 யூனிட் 'எம் - சாண்ட்' ஏற்றிக் கொண்டு சென்றார். திருநின்றவூர், நாச்சியார்சத்திரம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி, மின் கம்பத்தில் உரசி நின்றது. நேற்று காலை, மண் அகற்றப்பட்டு லாரி மீட்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ