உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கோயம்பேடில் மின்சாரம் பாய்ந்து இரு எருமை மாடுகள் பலி

 கோயம்பேடில் மின்சாரம் பாய்ந்து இரு எருமை மாடுகள் பலி

கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில் மின்சா ரம் பாய்ந்து, இரு எருமை மாடுகள் உயிரிழந்தன. கோயம்பேடு சந்தை - 18ம் எண் நுழைவாயில் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பையை, நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அள்ளி, லாரி வாயிலாக அகற்றப்பட்டது. அப்போது, தரையில் செல்லும் மின் கேபிள் சேதமடைந்துள் ளது. இந்நிலையில், அங்கு கொட்டப்பட்ட கழிவுகளை உண்ண, நேற்று அதிகாலை சென்ற இரு எருமை மாடுகள், சேதமடைந்த கேபிள் மீது நடந்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. மின் வாரிய ஊழியர்கள், மின் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சமீபத்தில் பசு மாடு ஒன்று மின்சாரம் பாய்ந்து பலியானது. இதனால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் இடையே, அச்சம் நிலவி வருகிறது. மனித உயிர் பலி ஏற்படும் முன், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை