உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2ம் முறை போக்சோவில் வாலிபருக்கு காப்பு

2ம் முறை போக்சோவில் வாலிபருக்கு காப்பு

கோயம்பேடு,சிறுமிக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், இரண்டாவது முறையாக 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2022ம் ஆண்டு, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி, 39, என்பவர், தன்னுடைய 17 வயது மகளை காதலிப்பதாகக் கூறி பாலியல் தொல்லை அளிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார்.இதையடுத்து போலீசார், பாலாஜியை 'போக்சோ'வில் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமினில் வெளிவந்த பாலாஜி, மீண்டும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் மீண்டும் வழக்குப்பதிவு செய்து, பாலாஜியை இரண்டாவது முறையாக 'போக்சோ'வில் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி