உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகரிஷி பள்ளியில் யோகா வகுப்பு

மகரிஷி பள்ளியில் யோகா வகுப்பு

கோவை : சின்னவேடம்பட்டியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள மகாரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி., பள்ளியில், சி.பி.எஸ்.சி., பாடத் திட்டத்தில் யோகா வகுப்பு கற்றுத்தரப்படுகிறது. 'ராமஜெயம்' கல்வி அறக்கட்டளை சார்பில், சின்னவேடம்பட்டியில் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி. பள்ளி துவங்கப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டடத்தின் கிரக பிரவேச விழா நடந்தது. விழாவில், சென்னை சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முதல்வர் நமசிவாயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி தாளாளர் தர்மா கூறுகையில், ''இந்த கல்வியாண்டில் ப்ரிகேஜி முதல் 7ம் வகுப்பு வரை உள்ளது. யோகா வகுப்புகள், சி.பி.எஸ்.சி., பாடத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது'' என்றார். நிகழ்ச்சியில், 'ராமஜெயம்' கல்வி அறக்கட்டளை முதன்மை உறுப்பினர் சுப்ரமணியம், பள்ளி முதல்வர் சங்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை