உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வலம்புரி விநாயகர் கோவிலில் வரும் 3ல் கும்பாபிேஷகம்

வலம்புரி விநாயகர் கோவிலில் வரும் 3ல் கும்பாபிேஷகம்

உடுமலை;உடுமலை குருவப்பநாயக்கனுார் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில், வரும் 3ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.உடுமலை அருகே குருவப்பநாயக்கனுாரில், ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஜூலை முதல் தேதி கும்பாபிேஷக விழா விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, முதற்கால யாக பூஜை நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, அடுத்த மாதம் 3ம் தேதி காலை, 4:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை, 6:00 மணி முதல் 7:00 மணி வரை ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ ஜல விநாயகர், ஸ்ரீ பாலமுருகர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஊர்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி