உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 438 கி., புகை பொருள் பதுக்கிய நபர் கைது

438 கி., புகை பொருள் பதுக்கிய நபர் கைது

சூலுார்;சூலுார் அருகே, 438 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கிய நபரை, போலீசார் கைது செய்தனர்.சூலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார், நேற்று காலை அவிநாசி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மயிலம்பட்டி பிரிவு அருகே வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பகத்சிங்,42, என்பவரிடம் விசாரணை நடத்தினர். கைக்கோளபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நடத்திய சோதனையில், 438 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி, கோவை மாவட்டத்தில் கடைகளுக்கு சப்ளை செய்தது தெரிந்தது.இதையடுத்து, காரை பறிமுதல் செய்த போலீசார், பகத் சிங்கை கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ