உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 83 நபர்கள் மீது 50 வழக்குகள் 103 கிலோ கஞ்சா பறிமுதல்

83 நபர்கள் மீது 50 வழக்குகள் 103 கிலோ கஞ்சா பறிமுதல்

பொள்ளாச்சி:கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் அதன் பயன்பாட்டை ஒழிக்கும் விதமாக, மாவட்ட போலீசார் கடந்த மே 1 முதல் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட, 83 பேர் மீது, 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவர்களிடம், 103.895 கிலோ கஞ்சா மற்றும்கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து, கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண், 94981 81212 மற்றும், 77081 00100 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணிலும், தகவல் தெரிவிக்கலாம்.'தகவல் தெரிவிப்போர் ரகசியம் காக்கப்படும். போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை